ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு வலென்சியா பகுதியில் மட்டும் 155 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் தண்ணீர் வெட்டு மற்றும் சில அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறையை மக்கள் எதிர்கொள்ளும் அதேவேளையில் வீடுகள் மற்றும் தெருக்களில் குப்பைகள் நிறைந்த அடர்ந்த மண் அடுக்குகளை மக்கள் சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.
(Visited 55 times, 1 visits today)





