வடகொரியாவில் இருந்து தப்பி ஓட முயன்ற நூற்றுக்கணக்கானோர் மாயம்

வடகொரியாவிலிருந்து தப்பி ஓட முயன்ற நூற்று கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
பொலிஸாரிடம் பிடிபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தென் கொரியாவைச் சேர்ந்த மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
வடகொரியாவிலிருந்து தப்பி ஓடித் தென்கொரியாவுக்கு வந்த 62 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
அப்போது அந்த விவரம் வெளியானது. 1953ஆம் ஆண்டில் கொரியப் போர் முடிவுற்றது. அதுமுதல் 10,000க்கும் மேற்பட்ட வடகொரியர்கள் நாட்டைவிட்டு ஓட முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
தப்பி ஓட முயன்றவர்கள் வடகொரியாவில் பிடிபட்டனர். சிலர் ரஷ்யாவிலும், சீனாவிலும் சிக்கியதாக நம்பப்படுகிறது.
(Visited 45 times, 1 visits today)