இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு ஹிஸ்புல்லா பதிலடி
லெபனானில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு ஹிஸ்புல்லா பதிலடி கொடுத்தது.
ஹைஃபா பகுதியில் ராக்கெட் தாக்குதலில் மேலும் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.
இதன் மூலம் நாட்டில் ஹிஸ்புல்லாஹ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
லெபனானில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஆலிவ் தோப்பில் மோதி இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவை மேகன் டேவிட் அடோம் (எம்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
30 வயதுடைய ஆணும் 60 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
சிறு காயங்களுடன் 71 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’
மெட்டுலாவில் ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதலில் 5 பேர் முன்னதாக கொல்லப்பட்டனர்.
ஒருவர் பலத்த காயம் அடைந்தார். இறந்தவர்களில் ஒருவர் இஸ்ரேலிய பிரஜை, மற்ற நான்கு பேர் வெளிநாட்டினர்.
அதே நேரத்தில், தெற்கு லெபனானின் நகரங்கள் மற்றும் கிராமங்கள் உட்பட பத்து பகுதிகளை காலி செய்யுமாறு இஸ்ரேல் மக்களை கேட்டுக் கொண்டது.
தாக்கப்போவதாக இஸ்ரேல் கூறிய இடத்தில் ரஷிதே அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன அகதிகள் வசித்து வருகின்றனர்.
வியாழன் அன்று லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. தலைநகர் பெய்ரூட்டையும் பெக்கா பள்ளத்தாக்கையும் இணைக்கும் அராயா-கலே சாலையில் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்பட்டது.
24 மணி நேரத்தில் காசா மற்றும் லெபனானில் 150 இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் எல்லையில் உள்ள சிரியாவின் குசேர் நகரையும் இஸ்ரேல் தாக்கியது.