இலங்கை: மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ரணிலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு!
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒருவரின் ஆலோசனையை தாம் ஒருபோதும் பெறமாட்டேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் அடிப்படையான ‘மக்கள் ஆணையை’ புரிந்து கொள்ளாத ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பை கற்பிக்க முன்வருவது பெரிய நகைச்சுவை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 3 visits today)