இலங்கை : மலையக மக்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கொடுப்பனவு அதிகரிப்பு!
தமிழ் மக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு அரச பெருந்தோட்ட கம்பனிகளால் வருடாந்தம் வழங்கப்படும் பண்டிகை கொடுப்பனவு பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில், பத்தாயிரம் ரூபாயாக இருந்த தொகை, 20,000 ரூபாயாக உயரும்.
தமிழ் உழைக்கும் மக்களின் குறைந்த வாங்கும் சக்தியை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)