பிரான்ஸில் அதிகரிக்கும் அடிப்படைச் சம்பளம் – வெளியான அறிவிப்பு
பிரான்ஸில் அடிப்படைச் சம்பளம் நவம்பர் முதலாம் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
வாரத்துக்கு 35 மணிநேரங்கள் பணிபுரியும் ஒருவருக்கு 2% சதவீதத்தால் இந்த அதிகரிப்பு இடம்பெறுகிறது.
அடிப்படைச் சம்பளம் 11.88 யூரோக்களால் அதிகரித்து, 1,801,80 ஆக உயர்வடைகிறதாக அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த தொகை முதல்முறையாக 1,800 யூரோ வரம்புக்கு மேல் செல்லும் என்று பிரதமர் மிஷேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தும் உத்தரவை கடந்த மாதம் 24ஆம் திகதி வெளியிட்ட நிலையில் அதனை பிரதமர் உறுதி செய்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலாம் திகதி ஸ்மிக் தானாகவே அதிகரிக்கிறது. இருப்பினும், குறைந்த வருமானம் 20 சதவீதம் குடும்பங்களைப் பாதிக்கும் பணவீக்க அளவுகளின் அடிப்படையில் வருடத்தில் அதிகரிப்புகள் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.