இலங்கையில் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை – ஜனாதிபதி வாக்குறுதி
இலங்கையில் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க திட்டம் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.
டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், ஒன்றரை வருடங்களில் அந்த பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் வங்கிக் கட்டமைப்பு நிலைமையை தாங்கிக்கொண்டு தொழில் முனைவோரையும் பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, தொழில் முனைவோர் அந்த தாங்கிக்கொள்ளலை தவறாகப் பயன்படுத்துவது சிக்கலான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் வங்கிகளும் தொழில் முனைவோரை பாதுகாக்கும் வகையில் முழுமையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதேபோல் தற்போது முறையற்று கிடக்கும் இலங்கை பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தும் போது, முறையற்ற பொருளாதாரத்திற்குள் தங்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.