தூக்கமின்மை எனப்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்
நம் உடல் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் நல்ல தூக்கம் அவசியம். தூக்க சரியாக இல்லை என்றால் சோர்வு, எரிச்சல் உணர்வு ஏற்படுவதோடு, உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே, இரவில் அனைவரும் சரியாக தூங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அதிலும், 40 வயதிற்குப் பிறகு தூங்குவதில் சிரமம் அல்லது தூக்கமின்மை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
இயற்கையாகவே, 40 வயதிற்குப் பிறகு, நமது தூக்கம் பாதிக்கப்படுகிறது. மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் அமித் வர்மா, 40 வயதிற்குப் பிறகு உடலில் மெலடோனின் என்ற ஹார்மோனின் அளவு குறைகிறது என்பதால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு பெரிதும் அதிகரிக்கிறது என்றும் கூறுகின்றனர்.. இதனால், இந்த வயதில் தூக்கமின்மை தீவிர நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது. சில சமயங்களில் இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
தூக்கமின்மை காரணமாக ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்
தூக்கமின்மை காரணமாக உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்காமல், பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த நிலை ‘சைலண்ட் கில்லர்’ அதாவது மெல்ல கொல்லும் நோய் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு நபரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை (Health Tips) ஏற்படுத்துகிறது. தூக்கம் சரியாக இல்லாததால், உங்களின் நோயெதிர்ப்பு சக்தி குறையும் ஆபத்தும் அதிகம். தூக்கமின்மை பிரச்சனை, கவனச்சிதறலை ஏற்படுத்தலாம். முடிவெடுத்தல் திறன், நினைவாற்றல் ஆகியவை மங்கி போகலாம்.
வயதுக்கு ஏற்ப தூக்கத்தின் தேவையும் மாறுகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், எந்த நிலையிலும், 7-8 மணிநேர தூக்கம் அவசியம். தூக்கமின்மை பிரச்சனை இதய நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இது தவிர, இது மன ஆரோக்கியத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை எரிச்சல், கவனக்குறைவு மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.
தூக்கமின்மை பிரச்சனையை சாதாரணமாக கருதி புறக்கணிக்கக்கூடாது. இந்த பிரச்சனை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால், ஒரு நிபுணரை அணுகுவது அவசியம். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த ‘அமைதியான கொலையாளி’ கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை பிரச்சனையை தவிர்க்க செய்ய வேனண்டியவை
தூக்கமின்மை காரணமாக, ஒரு நபரின் வேலை திறன் மற்றும் வாழ்க்கைத் தரம் இரண்டும் பாதிக்கப்படுகின்றன. இந்த பிரச்சனை இரவில் மட்டுமல்ல, பகலில் கூட சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். இந்த நிலையைத் தவிர்க்க மருத்துவர்கள் சில ஆலோசனைகளை வழங்குகிறார்கள், தூங்குவதற்கு முன் திரை நேரத்தைக் குறைத்தல், காஃபின் உட்கொள்ளலைக் குறைத்தல் மற்றும் இரவில் தளர்வு பயிற்சிகள் செய்வது போன்றவை.