ஐரோப்பா

உக்ரேன் போரை நிறுத்த மோடியின் செல்வாக்கு பயன்படும்; அதிபர் ஸெலென்ஸ்கி

ரஷ்யா-உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகம் பங்காற்ற முடியும் என்று உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்து உள்ளார்.மேலும், போரை எதிர்ப்பதாகக் கூறுவதுடன் நின்றுவிடாமல் அதற்கு அப்பாலும் இந்தியா செயல்பட வேண்டும் என்று அவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

“உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் மோடி தமது செல்வாக்கைப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வது அவருக்கும் இந்தியாவுக்கும் பெருமதிப்பைத் தேடித் தரும்,” என்று அவர் கூறினார்.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மோடி பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியம் குறித்து செய்தியாளர் கேட்டபோது, “அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.“இருப்பினும், அதற்கு நம்மை நாமே தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். போர் எங்கள் மண்ணில் நடப்பதால் எங்களது விருப்பத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடப்பதே சிறப்பாக இருக்கும்.“அமைதிக்கான உச்சநிலைக் கூட்டம் என்பது நாங்கள் தயாரித்து வைத்திருக்கும் ஓர் ஏற்பாடு,” என்றார் ஸெலென்ஸ்கி.

டோன்பாஸ் வட்டாரத்தில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருவதால் அண்மைய மாதங்களாக உக்ரேனிய வீரர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், நடைபெற இருக்கும் அமெரிக்கத் தேர்தலால் உக்ரேன் போரில் நிச்சயமற்ற நிலை உருவாகக்கூடும் என்று ஸெலென்ஸ்கி கூறுகிறார்.அந்தத் தேர்தலில் ஒருவேளை டோனல்ட் டிரம்ப் வென்றால் அமெரிக்காவின் ஆதரவு உக்ரேனுக்குக் கிடைக்காமல் போகலாம் என்றும் அவர் கருதுகிறார்.

உக்ரேனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி அளித்து வருகிறது. அந்த உதவி நின்றுவிட்டால் உக்ரேனுக்கு அது பெரும் பின்னடைவாக அமையும்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!