இலங்கை: விபத்தை காணொளி பதிவு செய்த இளைஞர் கைது
வாரியபொல அருகே விபத்துக்குள்ளான டிஃபெண்டர் வாகனத்தை வீடியோ எடுத்த இளைஞன், காவல்துறையின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமானது என கூறப்படும் டிஃபென்டர் SUV ரக வாகனம் அனுராதபுரம்-பதெனிய வீதியில் விபத்துக்குள்ளானதில் பேருந்து நிறுத்தம் மற்றும் வாகனம் பாரியளவில் சேதமடைந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி ஒன்று, தன்னை வாரியபொல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் OIC என அடையாளப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அந்த இளைஞனை அச்சுறுத்தும் காட்சியை பதிவு செய்துள்ளார்.





