இலங்கையின் பிரிக்ஸ் அங்கத்துவ விண்ணப்பம் நிராகரிப்பு
பிரிக்ஸ் அமைப்பின் நிரந்தர அங்கத்துவ அமைப்பு நாடாக விண்ணப்பித்த இலங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்
நிரந்தர உறுப்பினர்களின் அங்கத்துவத்தில் செயல்படுத்துவதற்கு மேற்கொள்ளபட்டுள்ள தீர்மானத்திற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் எனினும் சாதாரண உறுப்பு நாடாக இலங்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கிணங்க அங்கத்துவ நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரிக்ஸ் அபிவிருத்தி வங்கியில் இணையவும் அனுமதி கிடைத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே பிரிக்ஸ் அபிவிருத்தி வங்கியில் இணையும் அனுமதியை?அமைச்சரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
உலகில் துரிதமாக முன்னேறிவரும் நாடுகளுக்கு இடையில் இந்த பிரிக்ஸ் நாணய அலகுப் பாவனை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, சீனா, ஈரான், பிரேசில், தென்னாபிரிக்கா, இந்தியா, எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் தற்போது அங்கம் வைக்கின்றன