29 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
ராவல்பிண்டியில் நடந்த கடைசி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 267 ஓட்டங்களும், பாகிஸ்தான் 344 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 112 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஜோ ரூட் 33 ஓட்டங்களும், ஹாரி புரூக் 26 ஓட்டங்களும் எடுத்தனர். நோமன் அலி 6 விக்கெட்டுகளும், சாஜித் கான் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 36 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அணித்தலைவர் ஷான் மசூட் 6 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்கள் விளாச பாகிஸ்தான் அணி 3.1 ஓவர்களில் 37 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
இந்த டெஸ்டில் சாஜித் கான் 10 விக்கெட்டுகளும், நோமன் அலி 9 விக்கெட்டுகளும் கைப்பற்றி
134 ஓட்டங்கள் எடுத்த சவுத் ஷகீல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாகிஸ்தான் அணி 2015ஆம் ஆண்டுக்கு பின் இங்கிலாந்துக்கு எதிராக வென்ற முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.
அதேபோல் முதல் டெஸ்டில் தோல்வியுற்றும், 3 போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி 29 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது