இலங்கை பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளரின் மனைவி மீது தாக்குதல்!
பாராளுமன்ற வேட்பாளர் உபாலி கொடிகாரவின் மனைவி காந்தி கொடிகார பன்னிபிட்டிய பிரதேசத்தில் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டுள்ளார்.
திருமதி கொடிகார தனது கணவரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் கலந்து கொண்டு, வீடு வீடாக சென்று உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொண்டு இருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு காரணமான நபரை மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





