2024ல் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள பெருந்தொகை பணம்
2024 செப்டம்பரில் இலங்கைக்கு வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் தொகை அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கூற்றுப்படி, இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் செப்டம்பர் 2023 இல் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், 2024 செப்டெம்பர் மாதத்தில் இது 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மொத்தப் பணம் 4,843.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதன் மூலம், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.5% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)





