ஹைட்டியில் உள்ள தூதரக ஊழியர்களை வெளியேற்றும் அமெரிக்கா
இந்த வாரம் ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் வன்முறை தீவிரமடைந்தது, இதில் ஐக்கிய நாடுகளின் ஹெலிகாப்டர் துப்பாக்கிச் சூடுகளால் தாக்கப்பட்டது மற்றும் இரண்டு கும்பல்கள் அமெரிக்க தூதரக வாகனங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹெய்ட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குச் சொந்தமான இரண்டு கவச வாகனங்கள் மீது இரு குற்றக் குழுக்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயங்கள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் அமெரிக்க வாகனங்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதல்கள், தூதரகத்தின் அருகாமையில் உள்ள கும்பல் நடவடிக்கைகளின் அதிகரிப்புடன், தலைநகரில் இருந்து 20 இராஜதந்திர ஊழியர்களை வெளியேற்றும் செயல்முறையைத் தொடங்க தூதரக அதிகாரிகளைத் தூண்டியுள்ளது.
“அவசரகாலம் அல்லாத” இராஜதந்திர ஊழியர்களை வெளியேற்றுவது “வரவிருக்கும் நாட்களில்” செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.