உகாண்டாவில் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி விபத்து – 11 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.
இதனால் லாரியின் டாங்கரில் இருந்த பெட்ரோல் கவிழ்ந்தது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெட்ரோலை எடுப்பதற்காக லாரி முன் குவிந்தனர்.
அப்போது திடீரென லாரியில் தீப்பற்றியது. பெட்ரோலில் தீ பிடித்து லாரி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.