சவுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 22,000 பேர் கைது
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 22000 பேரைக் கைது செய்ததுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளது.
இவர்களில் வதிவிட சட்டங்களை மீறிய 13,186 பேரும் அயல்நாடுகளில் இருந்து தேச எல்லைகளை மீறி வந்தவர்கள் 5,427 பேரும் தொழில் சட்டங்களை மீறிய 3,358 பேரும் ஆக மொத்தம் 21,971 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் யேமனியர் 34% எதியோப்பியர் 64% ஏனையோர் 2% அத்துடன் இவர்களுக்கு போக்குவரத்து இருப்பிடம் மற்றும் சேவைக்கு அமர்த்த ல் ஆகிய வசதிகளை வழங்கிய 18 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சவுதி அரேபியா பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு இணங்க சவுதி அரேபியாவுக்குள் எல்லை தாண்டி வரும் அயல் நாட்டவர்களுக்கு போக்குவரத்து வசதி தங்குமிடம் மற்றும் உதவிகளை வழங்கும் சுதேசிகளுக்கு 15 வருட சிறைத் தண்டனை சவுதி ரியால் 1 மில்லியன் அபராதம் அத்துடன் அவர்களது சொத்துக்களை அரசுடைமை ஆக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யேமனில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் போது சவுதி அரேபியாவுக்குள் அகதிகளும் பலஸ்தீன ஹிஸ்புல்லா ஹமாஸ் ஆதரவு போராளிகளும் உள்நுழையலாம் என்ற அச்சம் இதற்கு பிரதான காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.