இலங்கை – கம்பஹா மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக குழாய் திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி வத்தளை, மாபோல, ஜா அல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகரசபை பகுதிகளுக்கும் வத்தளை, பயகம, மஹர, ஜா அல, கட்டான மற்றும் மினுவாங்கொட உள்ளுராட்சி சபை பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
உயர் இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இங்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நாளை நண்பகல் 12 மணியளவில் நீர் விநியோகம் சீரமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நுகர்வோர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(Visited 17 times, 1 visits today)