இத்தாலியில் கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் – நெருக்கடியில் மக்கள்
இத்தாலியில் கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
சில வட்டாரங்களில் அதிகாரிகள் அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். சிசிலியின் லிக்காட்டா நகரில் வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தீயணைப்பாளர்கள் மீட்டனர்.
கனத்த மழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சல்சோ ஆற்றின் கரைகள் உடைத்துக் கொண்டதால் குடியிருப்பாளர்கள் வீடுகளின் கூரைகள் மீது தஞ்சமடைந்தனர்.
மத்திய டஸ்கனியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அங்கு விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது.
தென் மாநிலங்களிலும் கனத்த மழையாகும். நேப்பிள்ஸில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
சிசிலி தலைநகரில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையத்தில் பயணிகள் இருளில் நேரத்தைச் செலவிட நேர்ந்தது. பின்னர் நிலைமை சீரானதும் விமானச் சேவைகள் தொடர்ந்தன.