மத்திய கிழக்கு

காஸா போர் முடியும்வரை பிணைக்கைதிகளுக்கு விடுதலை இல்லை – ஹமாஸ் அமைப்பு

காஸா போர் முடியும் வரை 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி பிடிபட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று அக்டோபர் 18ஆம் திகதியன்று ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 16ஆம் திகதியன்று ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வரை இஸ்‌ரேலிய ராணுவம் கொன்றது.இதையடுத்து, ஹமாஸ் துக்கம் அனுசரித்து வருகிறது.யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை அடுத்து, போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகளுக்கும் காஸாவில் கடும் துயருக்கு ஆளாகியிருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பப்பட்டது.ஆனால், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்‌ரேல் நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பிணைக்கைதிகளை விடுவிக்கப்போதவில்லை என்று கத்தாரை மையமாகக் கொண்ட ஹமாஸ் அதிகாரி கலில் அல் ஹய்யா காணொளி மூலம் தெரிவித்தார்.

இந்நிலையில், அக்டோபர் 18ஆம் திகதியன்று காஸா மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தது.இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.இடிபாடுகளிலிருந்து மூன்று சிறுவர்களின் சடலங்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக காஸாவின் குடிமைத் பாதுகாப்புப் படை தெரிவித்தது.

இதற்கிடையே, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதாக அக்டோபர் 17ஆம் திகதியன்று இஸ்‌ரேல் உறுதிப்படுத்தியது.சின்வரின் மரணம் போரின் முடிவல்ல என்றும் முடிவின் தொடக்கம் என்றும் இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறினார்.

(Visited 76 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!