ஜெர்மனியில் குளிர்சாதன பெட்டிக்குள் சடலம் – மோதலால் வெளிவந்த இரகசியம்

ஜெர்மனியில் குளிர்சாதன பெட்டியில் மனித உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் இரண்டு ஆண்களுக்கு இடையில் மோதல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோதலை கட்டுப்படுத்தி விசாரணையை மேற்கொண்டனர். இதன்போது வீடு ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் மனித உடல் உறுப்புகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
ரயில் நிலையத்தில் கொலை தொடர்பிலேயே இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலந்து நாட்டு பிரஜையான 40 வயதுடைய நபரையும் 33 வயதான ஜெர்மன் பிரஜையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலந்து பிரஜை மீது கொலை சந்தேகம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீவிர விசாரணையின் பின்னர் ஜெர்மனி பிரஜை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குளிரூட்டப்பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் யாருடையது என்பது குறித்து தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பான தீவிர விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.