இத்தாலியில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வீதிக்கு இறங்கிய தொழிலாளர்கள்!
இத்தாலியில் வாகன தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான வாகனத் தொழிலாளர்கள் தலைநகரின் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர்.
தொழிற்சங்கங்களின் சிவப்புக் கொடிகளை அசைத்து, சிறந்த வேலை நிலைமைகளைக் கேட்கும் பதாகைகளை ஏந்தியபடி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியில் உள்ள இத்துறையின் மூன்று முக்கிய தொழிற்சங்கங்கள் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)





