1000 மில்லியன் அமெரிக்க டொலருக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரணில் – சந்திரிகா
 
																																		டுபாயில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகள் ரணில்விக்கிரமசிங்கவும் சந்திரிகா குமாரதுங்கவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே இது இடம்பெற்றது.
அரசியல் தலைவர் ஒருவரின் இளைய மகன் டுபாயில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் மறைத்து வைத்திருப்பது 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அரசாங்கத்தினை அதனை மீட்டு நாட்டிற்கு கொண்டுவரமுடியவில்லை என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நான் எனது கண்ணால் அந்த வங்கிகூற்றை பார்த்தேன். ஆனால் அந்த ஆவணங்களின் மூலப்பிரதிகள் இல்லாததாதல் எங்களால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளி;த்துள்ள ரணில்விக்கிரமசிங்க தனது அரசாங்கம் நபர்களை டுபாய்க்கு அனுப்பியது ஆனால் எந்த பணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினர்கள் வெளிநாட்டில் பணத்தை மறைத்து வைத்திருக்கின்றனர் என எனக்கு தெரிவித்தனர்,துபாய் நஷனல் வங்கியிலேயே அந்த பணம் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்,
பொலிஸ் – சட்டமா அதிபர் திணைக்களம் இலஞ்ச ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நாங்கள் துபாய்க்கு அனுப்பிவைத்தோம்என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எங்களால் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன துபாயின் வெளிவிவகார அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
ஆனால் பணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை நீதிமன்ற உத்தரவின்றி விபரங்களை வழங்க முடியாது என அந்த வங்கி தெரிவித்துவிட்டது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாங்கள் சிங்கப்பூர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கும் குழுக்களைஅனுப்பினோம் கண்டுபிடிக்க முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
        



 
                         
                            
