ஆப்பிரிக்காவில் உலுக்கிய mpox – 1,100 பேர் மரணம்

ஆப்பிரிக்காவில் mpox நோய் ஏற்பட்டு சுமார் 1,100 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்தது.
நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த நோய் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று அது எச்சரித்தது.
இவ்வாண்டு ஜனவரி முதல் 42,000 mpox நோய்ச்சம்பவங்கள் ஆப்பிரிக்காவில் பதிவாகியுள்ளதாக ஆப்பிரிக்காவின் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்தது.
முதல் முறையாக ஸாம்பியாவிலும் ஸிம்பாப்வேயிலும் mpox நோய்ச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாண்டு 18 ஆப்பிரிக்க நாடுகளில் mpox நோய்ச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
mpox நோயைத் தடுப்பதற்கு அனைத்துலக நாடுகள் உடனடியாக நிதியளிக்கவேண்டும் என்று ஆப்பிரிக்காவின் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் கேட்டுக்கொண்டது.
(Visited 18 times, 1 visits today)