இத்தாலியில் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற தடை – தண்டனைக்குரிய குற்றம் என அறிவிப்பு
வெளிநாடுகளுக்குச் சென்று வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்வதையும் சட்டப்படி குற்றம் என இத்தாலி அறிவித்துள்ளது.
இத்தாலியில் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என 20 ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் இயற்றிய அரசாங்கம் அறிவித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்மூலம் தங்களால் சட்டப்படி பெற்றோராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தாலியில் பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு, எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
(Visited 15 times, 1 visits today)