ஹமாஸ் தலைவரை கொன்றதற்காக இஸ்ரேலை பாராட்டிய ஜோ பைடன்
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொன்றது உலகிற்கு “நல்ல நாள்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.
மேலும் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு முக்கிய தடையாக இருந்ததையும் இது நீக்கியதாக தெரிவித்தார்.
“இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், உலகிற்கும் இது ஒரு நல்ல நாள்” என்று செய்தி வெளியானதும் ஜெர்மனிக்கு பயணம் செய்த பைடன் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.
“வாழ்த்துக்கள்” ஆனால் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான “பாதை பற்றி விவாதிக்க” மற்றும் “இந்த போரை ஒருமுறை முடிவுக்கு கொண்டுவர” நெதன்யாகுவுடன் பேசப்போவதாக பைடன் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)