ஜெர்மனியில் மக்களை ஏமாற்றி பெருந்தொகை பணமோசடி – சுற்றிவளைத்த பொலிஸார்
ஜெர்மனியில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான கடும்போக்கு சிந்தனை கொண்ட 33 வயதான மதத் தலைவர் தேரான் ஹஸ்நொப் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
நன்கொடை நிறுவனங்களை நடத்துவதாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து பெருந்தொகை பணத்தை பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்தப் பணத்தின் ஊடாக எந்தவொரு மக்களுக்கு நிதி பங்களிப்பு வழங்கவில்லை. மாறாக தனது தனிப்பட்ட தேவைகளுக்கான அது பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்ட பெற்ற நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் பொலிஸாரின் நடவடிக்கை குறித்து அறிந்து கொண்ட, மோசடி மதகுரு வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதனையடுத்து விரை செயற்பட்ட பொலிஸார் அவரை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். அதேவேளை மதகுருவின் வீட்டினை சோதனையிட்ட போது பெருந்தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.