( Update)துருக்கியில் பதிவான நிலநடுக்கம் : 40இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி!
கிழக்கு துருக்கியில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் இது பரவலான பீதியை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை பிரசிடென்சியின் படி, 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் பதிவாகியதாக கூறப்படுகிறது.
தியர்பாகிர், எலாசிக், சன்லியுர்ஃபா மற்றும் துன்செலி உள்ளிட்ட அருகிலுள்ள மாகாணங்களிலும், வடக்கு சிரியாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்பகுதி முழுவதும் மக்கள் அச்சத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறியதுடன் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)