இலங்கை: கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி
கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்த போது இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிஹிஜய செவன பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர்கள் காரில் வந்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






