இலங்கை : ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை தீர்மானம்!
அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்திற்கான இந்த மேலதிக கொடுப்பனவு எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஓய்வூதியம் பெறுவோருக்கு நீண்டகாலமாக நிலவிவரும் ஊதிய முரண்பாடுகள், குறுகிய காலத்தில் அந்த ஊதிய முரண்பாடுகளை தீர்ப்பது கடினம்.
ஆனால் ஓய்வூதியர்களுக்கு உடனடியாக 3000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த மாதம் 10ம் திகதிக்குள் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு ஓய்வூதியர்களுக்கும் 3000 உதவித்தொகையை இந்த மாதத்திற்கான தனி உதவித்தொகையாக வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.