பிரித்தானிய மன்னராக இன்று முடிசூட்டுகிறார் மூன்றாம் சார்லஸ்!

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு இன்று அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறுகிறது.
பக்கிங்காம் அரண்மனையில் இருந்து சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் குதிரைகள் பூட்டப்பட்ட மிகச் சிறிய தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு செல்வார்கள்.
பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஏந்தி மன்னர் 3ம் சார்லஸ் அரியணையில் அமர்வார். மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னருக்கு சூட்டப்படும்.
அதே தினத் தில், இங்கிலாந்து ராணியாக அவரது மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது தலையிலும் மேரிகிரீடம் சூட்டப்படு ம். உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(Visited 13 times, 1 visits today)