ஜெர்மனியில் புலம்பெயர்வோருக்கு எதிராக கடுமையாகும் சட்டம் – நாட்டில் ஏற்பட்ட மாற்றம்
ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து வரும் அகதிகளின் எண்ணிக்கயில் பாரிய அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க முடிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ளதாக எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டதன் காரணத்தினால் அகதிகள் வருகை வெகுவாக குறைவடைந்துள்ளது.
இந்த நடவடிக்கையின் தீவிரத்தன்மைக்கு அச்சமடைந்து ஜெர்மனிக்குள் அகதிகளின் வரும் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.
அகதிகளின் வருவதற்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு அதிகாரிகளினால் தீவிர கண்கானிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வருடம் அகதிகளின் எண்ணிக்கையானது 15 சதவீதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.