கடும் நிதி நெருக்கடியில் போயிங் நிறுவனம்

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான போயிங், தான் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்களுக்குத் தீர்வாக 10% பணியாளர்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதனால் நிறுவனத்தின் நிர்வாக நிலை அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் உட்பட சுமார் 17,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, உலகின் மிகப் பெரிய மற்றும் திறமையான ஜெட் விமானமாக கருதப்படும் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான 777X ஜெட் வெளியீட்டை ஒத்திவைக்கவும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேசமயம், போயிங் நிறுவனத்தின் சந்தைப் பங்குகளும் 2.12 வீதம் சரிந்துள்ளன.
(Visited 6 times, 1 visits today)