மூளையை மந்தமாக்கும்… சில உணவுகளும் பழக்கங்களும்
மூளை பலவீனம்: பொதுவாக முதுமையில் தான் நமது மூளை பலவீனமடைந்து வேலையைச் செய்யும் தனது திறனை இழக்கத் தொடங்குகிறது. ஆனால் ஆரோக்கியமற்ற சில பழக்கம் காரணமாக இளைமையிலே மூளையின் சக்தி குறைக்கிறது.
மூளை மந்தமாக இருப்பதன் அறிகுறிகள்: நினைவாற்றல் குறைதல், மூளையின் செயல்பாடு குறைதல், புரிந்து கொள்வதில் சிக்கல்கள் ஆகியவை, மூளை மந்தமானதன் அறிகுறிகளாக இருக்கலாம்.மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பழக்கங்களை பற்றி தெரிந்து கொள்வோம்…
துரித உணவுகள்: இன்றைய துரித உணவுப் பழக்கம் பல கடுமையான நோய்களை நோக்கி மக்களைத் தள்ளுகிறது. துரித உணவுகள் வளர்சிதை மாற்றத்தை குறைத்து, உடல் பருமனையும், சோம்பலையும் உண்டாக்கும். இதனால், மூளையின் ஆற்றல் பெரிதும் பாதிக்கும். இவற்றை அடிக்கடி உட்கொள்வதால் நினைவாற்றல் பலவீனமடையும்…
பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள்: ரெடு டு ஈட் வகை உணவுகள், குக்கீஸ், பிஸ்கட்கள், சிப்ஸ் போன்றவற்றில் டிரான்ஸ் கொழுப்பு நிறைந்துள்ளது. இவற்றை அதிகமாக உட்கொள்வதால் இரத்தத்தில் அதிக அளவு டிரான்ஸ் கொழுப்பு அதிகரித்து இதய நோய்கள், அல்சைமர், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
பொறித்த உணவுகள்: எண்ணெயில் பொறித்த உணவுகளில் ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால், அல்சைமர் அல்லது பார்கின்சன் நோய் அபாயம் மிகவும் அதிகரிக்கும் நிபுணர்களின் கூற்றுப்படி, அவற்றின் நுகர்வு மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும், இது நரம்பியக்கடத்தல் நோய்களுடன் இணைக்கப்படலாம்.
மதுப்பழக்கம்: அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது மூளையின் செயல்திறனை குறைப்பதோடு வளர்சிதை மாற்ற மாற்றத்தை பாதிக்கும். மூளை தகவல்தொடர்புக்கு பயன்படுத்தும் நரம்பியக்கடத்திகளில் சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும், வைட்டமின் பி1 குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இது வெர்னிக் என்செபலோபதி எனப்படும் மூளைக் கோளாறையும் ஏற்படுத்தும்.