ஈரான் மீதான தடைகளை அதிகரிக்க தயாராகும் அமெரிக்கா
இஸ்ரேல் மீது ஈரான் அண்மையில் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்கா, ஈரான் மீதான தடைகளை விரிவுபடுத்தியுள்ளது.
அதற்குப் பதிலடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. டெஹ்ரானின் எண்ணெய் துறையைக் குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.
ஈரான்மீதான நெருக்கடியை அதிகரிக்கப் பல நிறுவனங்கள்மீதும் கப்பல்கள்மீதும் தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டது.
உலகின் பிற பகுதிகளுக்குச் சட்டவிரோதமாக எண்ணெய் கொண்டுசெல்லும் ஈரான் கப்பல்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.
ஈரானின் எண்ணெய் வசதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளார். லெபனானில் உள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அமைதிப்படையைத் தாக்க வேண்டாம் என்றும் அவர் இஸ்ரேலிடம் வலியுறுத்தினார்.