பிரதமர் மோடியால் வங்கதேசத்திற்கு பரிசளிக்கப்பட்ட கிரீடம் திருட்டு

வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி தேவி கோவில் அமைந்துள்ளது.
இந்து புராணங்களின்படி இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது.
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது வங்காளதேச சுற்றுப்பயணத்தின்போது இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தார்.
அப்போது அங்குள்ள காளி தேவி சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் தற்போது திருடப்பட்டுள்ளது. கோவில் பூசாரி தினசரி பூஜையை முடித்துவிட்டு கிளம்பிய பின்இந்த திருட்டு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 19 times, 1 visits today)