தமிழகத்தில் சரக்கு ரயிலுடன் மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் சரக்கு ரயிலுடன் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தின் போது 10 பயணிகள் காயமடைந்தனர், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் வேன் தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது 12578 மைசூர்-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய ரயில்வேயின் செயல் இயக்குனர்திலீப் குமார், “12578 பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. 95% க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அல்லது கடுமையான காயங்கள் எதுவும் இல்லை.” என்று தெரிவித்தார்.