மலேசியாவில் கழுகைத் தவிர்க்க நினைத்து விபத்துக்குள்ளாகி உயிரியழந்த நபர்!
விரைவுச்சாலையில் வாகனம் ஓட்டிச் சென்ற 37 வயது நபர் ஒருவர், அங்கு வந்த கழுகின் மீது மோதாமல் இருக்க காரை வேறு திசையில் திருப்பினார்.ஆனால், கழுகுக்குப் பதிலாக அவரது உயிர் போனது.
சாலையை விட்டு அகன்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
விபத்து மான்ஜுங் அருகே வெஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் அக்டோபர் 8ஆம் திகதி மாலை 4.35 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
நபர் தமது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலை அருகே இருந்த பனை எண்ணெய்த் தோட்டத்துக்குள் அது சென்று நின்றது.
அந்த நபர் வாகனத்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாக தீயணைப்பு, மீட்புப் பிரிவுப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
அவரை வாகனத்தை விட்டு வெளியே கொண்டு வந்த பிறகு, அவர் உயிரிழந்துவிட்டதை விபத்து நடந்த இடத்தில் இருந்த மருத்துவப் பணியாளர்கள் உறுதிசெய்தனர் என்று அக்டோபர் 10ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 கீழ் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.