இந்தியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ரத்தன் டாடா காலமானார்

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (86) காலமானார்.

மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

1991 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். நாடு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

அவர் 1937 டிசம்பர் 28 அன்று மும்பையில் பிறந்தார்.

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்.

1962ல் டாடா குழுமத்தில் சேர்ந்தார். 1974 டாடா சன்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

1981 ஆம் ஆண்டு டாடா இண்டஸ்ட்ரீஸின் தலைவரான ரத்தன் டாடா, 1991 ஆம் ஆண்டு ஜேஆர்டி டாடாவிடம் இருந்து டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

அவர் டிசம்பர் 2012 வரை பதவியில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 63 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!