இந்தோனேசியாவில் குழந்தையை ஆன்லைனில் விற்பனை செய்த இளைஞர்!
இந்தோனேசியாவில் தந்தை ஒருவர் சூதாட்டத்திற்கு பணம் பெற வேண்டி தனது குழந்தையை ஆன்லைனில் விற்க முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
RN என குறிப்பிடப்படும் 36 வயதான நபர், பேஸ்புக்கில் தனது குழந்தையை $955 (£729)க்கு விற்பனை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி சிக்கல்கள் காரணமாக குழந்தையை விற்றதாக RN பொலிசாரிடம் கூறியதாகவும், ஆனால் அந்த நிதியை ஆன்லைன் சூதாட்டத்திற்காக அவர் பயன்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் ஜகார்த்தாவுடன் இணைந்த நகரமான டாங்கெராங்கில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் இரண்டு பெரியவர்களுடன் போலீசார் குழந்தையை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.





