இங்கிலாந்தில் 40mm மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு : பயண இடையூறுகளும் ஏற்படலாம்!
இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு 06 மணி நேர மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தின் சில பகுதிகளை மேலும் வெள்ளம் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்தில் 40 மிமீ மழை பெய்யக்கூடும் என தேசிய முன்னறிவிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதன்காரணமகா யார்க்ஷயர் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் மக்கள் பயண இடையூறுகளை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.





