லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட சலுகை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு பெறுவதற்காக, இந்த சலுகை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் நிலவும் அசாதாரண நிலைமையினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கீழ் மேற்கொண்டுள்ள பதிவுகள் காலாவதியான நிலையில் லெபனானில் பணியாற்றிவரும் இலங்கையர்களுக்கு, குறித்த பதிவைப் புதுப்பிப்பதற்காக இந்த சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதிவரை இந்த சலுகைக் காலம் அமுலில் இருக்கும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)