இலங்கையில் புதையல் தோண்டிய மூவரை கைது செய்த பொலிஸார்!
 
																																		புதையல் தோண்டியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று(07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம், நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஸ்யால பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நிட்டம்புவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ்யால, வதுரகம மற்றும் ஜா -எல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29, 48 மற்றும் 54 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
