கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு – மற்ற நிறுவனங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்!
கூகுள் ப்ளே ஆப் ஸ்டோரில் போட்டி தொழில்நுட்ப நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க பெடரல் நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் மூன்று ஆண்டுகளுக்கு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபோர்ட்நைட் என்ற ஹிட் வீடியோ கேமின் தயாரிப்பாளரான எபிக் கேம்ஸ் கூகுளுக்கு எதிராக கொண்டுவந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகவும், முன்மொழியப்பட்ட தீர்வுகளுக்கு இடைநிறுத்தம் கோருவதாகவும் கூகுள் கூறுகிறது.
இந்த மாற்றங்கள் நுகர்வோரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும், டெவலப்பர்கள் தங்கள் பயன்பாடுகளை விளம்பரப்படுத்துவதை கடினமாக்கும், மேலும் சாதனங்களில் போட்டியைக் குறைக்கும்” என்று கூகுள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.