மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பெருவெள்ளம்; 601 பேர் பாதிப்பு

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் அக்டோபர் 6ஆம் திகதியன்று கனமழை பெய்ததை அடுத்து, வெள்ளம் ஏற்பட்டது.
வெள்ளத்தால் 163 குடும்பங்களைச் சேர்ந்த 601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்காலிகத் துயர்துடைப்பு நிலையங்களில் தங்குவதாக ஜோகூர் மாநிலத்தின் பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
பாதிப்படைந்தோரில் பெரும்பாலானோர் குளுவாங்கைச் சேர்ந்தவர்கள் (334 பேர்).
பொந்தியானைச் சேர்ந்த 250 பேரும் பத்து பாகாட்டைச் சேர்ந்த 17 பேரும் துயர்துடைப்பு நிலையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
(Visited 33 times, 2 visits today)