இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மற்றுமொரு சலுகையும் இரத்து

இலங்கை சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவுறுத்தல் சகல அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 40 times, 1 visits today)