ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனம் மீது சைபர் தாக்குதல்
திங்களன்று ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனம், அதன் ஆன்லைன் சேவைகள் ஒரே இரவில் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியதாகக் கூறியது.
“அக்.7 இரவு, VGTRK இன் (அனைத்து ரஷ்ய மாநில தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு நிறுவனத்தின்) ஆன்லைன் சேவைகள் முன்னோடியில்லாத வகையில் ஹேக்கர் தாக்குதலுக்கு உள்ளாகின,” என்று அந்நிறுவனம் கூறியதாக அரசு செய்தி நிறுவனமான Tass தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலால் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள நிறுவனம், அதன் பாதிப்புகளை குறைக்க அதன் வல்லுநர்கள் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பில் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தலைநகர் மாஸ்கோவில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், நிறுவனத்தின் வல்லுநர்கள் தற்போது அனைத்து சூழ்நிலைகளையும் கண்டுபிடித்து தடயங்கள் எங்கு செல்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
சைபர் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் வழங்கப்படவில்லை.