பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சு அவமானகரமானது – உச்சக்கட்ட கோபத்தில் இஸ்ரேல்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இஸ்ரேலைக் கடுமையாகக் குறைகூறியிருக்கிறார்.
லெபனான், காஸா 2 இடங்களிலும் இஸ்ரேலின் நடவடிக்கையை அவர் கண்டித்தார். இஸ்ரேலுக்கு ஆயுதம் தருவதை உலக நாடுகள் நிறுத்தவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு விமர்சித்துள்ளார்.
அது அவமானகரமான பேச்சு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசாக் ஹெர்சோக் (Isaac Herzog) ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் கடுமையாகக் குறைகூறினார்.
இஸ்ரேலுக்கு எதிராக வெறுப்பு விதைக்கப்படுவதாக அவர் கூறினார். இதற்கிடையே ஈரானிய வெளியுறவு அமைச்சர், ஈரானை இஸ்ரேல் தாக்கினால் கடுமையான பதிலடி தரப்படும் என்று எச்சரித்தார்.
(Visited 40 times, 1 visits today)