ஹவுதிகளின் இலக்குகள் மீது கூட்டு தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் பிரித்தானியா!
ஏமனில் உள்ள 15 ஹவுதி இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
செங்கடலில் கப்பல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே ஹூதிகள் குறிவைக்கப்பட்டதாக பென்டகன் கூறுகிறது.
15 ஹூதி இலக்குகள், ஆயுத அமைப்புகள் மற்றும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பின் தளங்கள் உட்பட, வான்வழித் தாக்குதலில் குறிவைக்கப்பட்டன.
போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்படி, ஏமனின் தலைநகர் சனா மற்றும் முக்கிய துறைமுக நகரான ஹுதைடா உள்ளிட்ட பல நகரங்கள் தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நவம்பர் 2023 முதல் இப்போது வரை, செங்கடலில் 100 க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களை ஹூதி அமைப்பு தாக்கியுள்ளது.
ஏறக்குறைய ஓராண்டு காலமாக இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு நடுவே இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இது அமைந்துள்ளது.
இதனிடையே நேற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
லெபனானில் இருந்து சிரியாவுக்கு செல்லும் பாதைதான் அவர்களின் இலக்கு என்றும், லெபனானில் இருந்து வெளியேறும் ஒரே தரைவழிப் பாதைதான் என்றும் கூறப்படுகிறது.
லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் சிரியாவுக்கு இடம்பெயர்ந்து வருவதாகவும், வீதி மறியல் காரணமாக அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.