வார இறுதியில் இந்தியா செல்லும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் ஐந்து நாள் பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகை தருகிறார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் வரும் அக்டோபர் 6 முதல் 10 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
இந்த பயணத்தின் போது, இருத்தரப்பு உறவு, பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் அவர் ஆலோசிக்கிறார்.
தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் அவர் சந்திக்கிறார். மேலும் தில்லி மட்டுமின்றி, மும்பை மற்றும் பெங்களூருவில் நடைபெறும் வணிகம் தொடர்பான நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்கிறார் என தெரிவித்துள்ளது.
(Visited 94 times, 1 visits today)